தாய்ப்பாலும் நஞ்சாகலாம்! நாம் செய்ய வேண்டியது என்ன?

தாய்ப்பாலும் நஞ்சாகலாம்! நாம் செய்ய வேண்டியது என்ன?

பிறந்த குழந்தைகளின் ஊட்டச்சத்துக்கான முதன்மை ஆதாரமே தாய்ப்பால் தான். இதில், குழந்தை வளர்ச்சிக்குத் தேவையான கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் மாறக்கூடிய தாதுக்களும் உயிர்சத்துகளும் அதிகம் உள்ளன. அத்தகைய தாய்ப்பாலும் நஞ்சாகலாம் என்று இப்போது பதறவைக்கிறார்கள். அதற்குக் கரணம், நம் உணவு உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்து என்கிறார்கள்.br br தாய்ப்பால் இப்படி விஷமாவதை தடுக்க வேண்டுமானால் இயற்கை முறையில் விவசாயம் செய்யவேண்டும் என்கிறார் இயற்கை வேளாண் வல்லுநர் பாமயன். மதுரை மாவட்டம் T.கல்லுப்பட்டியை சேர்ந்த இவர், தற்போது தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் இயற்கை விவசாயம் செய்கிறார். இயற்கை விவசாயம் தொடர்பாக பல புத்தகங்களையும் எழுதி உள்ளார்.


User: kamadenudigital

Views: 2

Uploaded: 2023-02-16

Duration: 11:00