கதாபாத்திரமாகவே பேசும் பொன்னியின் செல்வன் நடிகர்கள்!

கதாபாத்திரமாகவே பேசும் பொன்னியின் செல்வன் நடிகர்கள்!

பொன்னியின் செல்வன் முதல் பாகத்துக்கும் இதே போன்று கார்த்தி - த்ரிஷா - ஜெயம் ரவி இடையிலான உரையாடல் ரசிகர்களால் அப்போது அதிகம் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் இப்போது இரண்டாம் பாகத்தை முன்னிட்டு அடுத்த இன்னிங்ஸை இன்று ஆரம்பித்தார்கள். கார்த்தி ’ஹாய், இளையபிராட்டி’ என்று ஆரம்பித்து வைத்தார். பதில் வராது போகவே ’என்ன பதிலே இல்லை’ என்று புலம்பினார். தாமதமாக எட்டிப்பார்த்த த்ரிஷா ‘என்ன வாணர்குல இளவரசே?’ என்றார். இதற்கு கார்த்தி ‘தங்கள் தரிசனம் கிடைக்குமா?’ என்று கேட்டதும், காத்திருந்தார்போல விஜய் ரசிகர்கள் உள்ளே வந்து ’அவர் ’லியோ’க்காக விஜயுடன் இருக்கிறார். தொந்தரவு பண்ணாதீங்க’ என்றனர்.br br இப்படி, கார்த்தி - த்ரிஷா இடையே தொடர்ந்த ட்விட்டர் உரையாடலில் நூற்றுக்கணக்கான இணையவாசிகள் பங்கேற்று பலவிதமாய் உரையாடி வருகின்றனர். படக்குழு எதிர்பார்த்தவாறே, படத்தின் புரமோஷன் உத்தி நன்றாகவே எடுபட்டுள்ளது. வரும் நாட்களிலும், பொன்னியின் செல்வனின் இதர பாத்திரங்கள் பங்கேற்க, இன்னும் ட்விட் உலகம் சுவாரசியமாக களைகட்டும் என்று எதிர்பார்க்கலாம்.


User: kamadenudigital

Views: 779

Uploaded: 2023-03-22

Duration: 02:03

Your Page Title