அத்தி பழம் பயன்கள்

அத்தி பழம் பயன்கள்

உடல்நலம் நன்றாக இருக்கவும், நீண்ட காலம் நோய் நொடிகள் ஏதுமின்றி வாழ்வதற்கு பழங்கள் போன்ற சத்துமிக்க இயற்கை உணவு வேறெதுவும் இருக்க முடியாது. எண்ணற்ற வகையான பழங்கள் விளைகின்ற நமது நாட்டில், சாப்பிடுபவர்களுக்கு பல விதமான உடல் நோய்கள் பாதிப்புகளை நீக்கும் ஒரு பழமாக “அத்திப்பழம்” இருக்கிறது. இந்த அத்திப்பழத்தை ஜூஸ் போட்டு அருந்தினாலும், உலரவைத்து வத்தல் பதத்தில் சாப்பிட்டாலும் அதன் சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும். அந்த அத்திப்பழத்தினால் கிடைக்கும் பலவகையான நன்மைகள் குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.br அத்திப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:-br சர்க்கரை சத்து, புரோட்டீன், கால்சியம், இரும்பு சத்து மற்றும் பாஸ்பரஸ் ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் சத்துக்கள் நான்கு மடங்கு அதிகம் நிறைந்துள்ளது. இதைத் தவிர்த்து வைட்டமின் ஏ, வைட்டமின் சி ஆகிய ஊட்டச்சத்துக்களும் அதிக அளவில் நிறைந்துள்ளது.


User: HEALTH IS WEALTH

Views: 3

Uploaded: 2024-12-01

Duration: 02:46

Your Page Title