குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு: 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு: 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

pதென்காசி: தென்காசி மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும், ஒரு சில பகுதியில் கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாகவே மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள பகுதிகளில் அதிகப்படியாக கனமழை பெய்து வருவதால் குற்றாலத்தில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ppசுற்றுலா பயணிகளின் நலன் கருதி, ஒரு சில அருவிகளில் மட்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலையில் இருந்தே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி குற்றாலம், தென்காசி, பாவூர்சத்திரம், இலஞ்சி, புளியரை உள்ளிட்ட பகுதிகளில் அதிகப்படியாக கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு நிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ppஇதையும் படிங்க: நீலகிரி, கோவைக்கு ஆரஞ்சு அலர்ட்; வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. உங்க ஊர்ல இருக்கா?appஇதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றது குறிப்பிடத்தக்கது.


User: ETVBHARAT

Views: 17

Uploaded: 2025-05-27

Duration: 00:49

Your Page Title