தாமிரபரணி ஆற்றில் உற்சாக குளியல் போடும் யானைகள்: வைரலாகும் வீடியோ!

தாமிரபரணி ஆற்றில் உற்சாக குளியல் போடும் யானைகள்: வைரலாகும் வீடியோ!

pதூத்துக்குடி: ஆழ்வார்திருநகரி கோயில் யானைகள் தாமிரபரணி ஆற்றில் உற்சாக குளியல் போடும் காட்சிகள் தற்போது இனையத்தில் வைரலாகி வருகிறது.ppதூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதைச் சுற்றி 9 நவதிருப்பதி ஸ்தலங்கள் உள்ளது. அதில் ஆழ்வார்திருநகரி, இரட்டை திருப்பதி ஆகிய மூன்று ஸ்தலங்களிலும் உள்ள யானைகள் ஆழ்வார் திருநகரிக்கு அருகே உள்ள ஆழ்வார்தோப்பு பகுதியில் குடில் அமைக்கப்பட்டு அதில் பராமரிக்கப்பட்டு வருகிறது. குடிலுக்கு அருகே தாமிரபரணி ஆறு ஓடுவதால் தினந்தோறும் இங்கு பராமரிக்கப்படும் யானைகளை அதன் பாகன்கள் தாமிரபரணி ஆற்றுக்கு அழைத்து சென்று நீராட வைப்பார்கள்.ppஅதே போல இன்று மூன்று யானைகளையும் ஒரே நேரத்தில் குளிப்பதற்காக காலை நேரத்தில் தாமிரபரணி ஆற்றுக்கு கொண்டு சென்றனர். அதில் இரண்டு யானைகள் ஆற்று நீரில் படுத்துக்கொண்டு ஜாலியாக குளியல் போட்டு மகிழ்ந்தது. மற்றொரு யானை நின்றபடி தனது தும்பிக்கையால் தண்ணீரை தனது உடல் மேல் பீச்சி அடித்து கொண்டு குளித்தது.ppதற்போது தொடர்ந்து வெயில் அதிகரித்து வரும் நிலையில் இந்த மூன்று யானைகளும் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக குளியல் போட்டு மகிழ்ந்தன.


User: ETVBHARAT

Views: 6

Uploaded: 2025-08-15

Duration: 01:59

Your Page Title