வலையில் சிக்கிய 150 கிலோ கடல் ஆமை! மீண்டும் பாதுகாப்பாக கடலில் விட்ட மீனவர்!

வலையில் சிக்கிய 150 கிலோ கடல் ஆமை! மீண்டும் பாதுகாப்பாக கடலில் விட்ட மீனவர்!

pதஞ்சாவூர்: மீனவர் வலையில் சிக்கிய 150 கிலோ எடையிலான கடல் ஆமை, மீண்டும் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டது.ppதஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மனோரா கடல் பகுதியில் மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது மீனவர் கல்யாணகுமார் என்பவர் நடுக்கடலில் வலையை வீசி காத்திருந்தார். அவரது வலையில் திடீரென 150 கிலோ எடையிலான ராட்சத ஆமை சிக்கியது. பின்பு மீனவர்கள் இது குறித்து வனத் துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். ppஇதையடுத்து வன அலுவலர்களின் அறிவுரைப்படி மீனவர் கல்யாண குமார் மீண்டும் ஆமையை பாதுகாப்பாக கடலில் விட்டார். அதனைத் தொடர்ந்து, பட்டுக்கோட்டை வனச் சரக அலுவலர் சந்திரசேகரன் மீனவர் கல்யாண குமாரை வெகுவாக பாராட்டினார்.ppஇந்த ராட்சத வகை ஆமைகள் தாவரங்களை மட்டுமே உணவாக உண்ணும். அவற்றின் முட்டைகள் டென்னிஸ் பந்தின் அளவில் இருக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர். மேலும், பெரிய ஆமைகளின் குட்டிகள் சுமார் 3 அங்குல நீளத்தில் இருக்கும் எனவும் அவற்றின் ஆயுட்காலம் மிக நீண்டது எனவும் கூறப்படுகிறது.


User: ETVBHARAT

Views: 9

Uploaded: 2025-08-22

Duration: 00:55

Your Page Title