கொடைக்கானல் மலையில் அந்தரத்தில் தொங்கிய கார்.. 6 பேரின் நிலை?

கொடைக்கானல் மலையில் அந்தரத்தில் தொங்கிய கார்.. 6 பேரின் நிலை?

pதிண்டுக்கல்: கொடைக்கானல் மலைச்சாலையில் மற்றொரு வாகனத்தை முந்த முயன்ற கார், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ppதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. அதனால், நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் விடுமுறையை கழிக்க, கொடைக்கானல் வந்து செல்வது வழக்கம்.ppஇந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர், சொகுசு காரில் கொடைக்கானலை சுற்றிப் பார்க்க வந்துள்ளனர். இந்நிலையில், பெருமாள்மலை அருகே வந்து கொண்டிருந்த போது, காரை ஓட்டி வந்த நபர், மற்றொரு வாகனத்தை முந்த முயன்றுள்ளார். இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை அருகே இருந்த தனியார் விடுதி வளாகத்தில் பாய்ந்தது.ppஇதில், அங்கிருந்த விளம்பரப் பலகை கம்பி மற்றும் தடுப்புச் சுவர் மீது மோதி நின்றதால், பள்ளத்தில் கவிழாமல் கார் அந்தரத்தில் தொங்கியுள்ளது. இதனால் காரில் பயணித்த நபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.ppஅதனைக் கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து சென்று, காரில் இருந்த நபர்களை பத்திரமாக மீட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், கார் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது.


User: ETVBHARAT

Views: 5

Uploaded: 2025-09-25

Duration: 01:20

Your Page Title