தீபாவளி பண்டிகை எதிரொலி: மீன் மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்!

தீபாவளி பண்டிகை எதிரொலி: மீன் மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்!

pவேலூர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் அதிக அளவில் மீன் விற்பனை நடைபெற்றது.ppநாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், மீன்கள் வாங்க பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு மீன் சந்தைகளுக்கு படையெடுத்தனர். இதன் காரணமாக அதிகாலையில் தொடங்கிய மக்கள் கூட்டம், பிற்பகலையும் தாண்டியும் இருந்து வந்தது. வேலூர் நகரின் முக்கிய மீன் சந்தையான வேலூர் மீன் மார்க்கெட்டில் விற்பனை முன் எப்போதையும் விட அதிக அளவில் இருந்தது. தரமான மீன்களை வாங்கும் ஆர்வம் கொண்ட பொதுமக்கள், நேரடியாக சந்தைக்கு வந்து மீன்களை வாங்கி சென்றனர்.ppவிற்பனை செய்யப்பட்ட மீன்களின் விலை விவரமானது இரால் – ₹350 முதல் ₹500. வஞ்சிரம் – ₹500 முதல் ₹1400. சங்கரா – ₹250 முதல் ₹400, கடல் வவ்வா – ₹400 முதல் ₹750 ,நண்டு – ₹400, பாறை – ₹300 முதல் ₹400, இரால் – ₹350 முதல் ₹500 வரையிலும் விற்கப்பட்டது.


User: ETVBHARAT

Views: 2

Uploaded: 2025-10-19

Duration: 02:35

Your Page Title