தஞ்சை பெரிய கோயிலில் தீபாவளி சிறப்பு பூஜை - பக்தர்கள் தரிசனம்!

தஞ்சை பெரிய கோயிலில் தீபாவளி சிறப்பு பூஜை - பக்தர்கள் தரிசனம்!

pதஞ்சாவூர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பெருவுடையாருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது.ppதஞ்சை பெரியக்கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்றது. இக்கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள்.ppநாடு முழுவதும் மிக உற்சாகமாக தீபாவளி பண்டிகை இன்று (அக் 20 ) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பெருவுடையாருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது. மேலும், பெருவுடையாருக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட திரவிய பொடி, அரிசி மாவு, மஞ்சள், தேன், பால், தயிர், பழ வகைகள், கரும்பு சாறு, சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், பக்தர்கள் புத்தாடை மற்றும் பாரம்பரிய வேட்டி, சேலைகள் அணிந்து  நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


User: ETVBHARAT

Views: 1

Uploaded: 2025-10-20

Duration: 01:39

Your Page Title