பள்ளி மாணவர்களுடன் வகுப்பறையில் எம்.எல்.ஏ!

பள்ளி மாணவர்களுடன் வகுப்பறையில் எம்.எல்.ஏ!

pகாஞ்சிபுரம்: யாகசாலை மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் ரூ.3.12லட்சம் மதிப்பீட்டில் மேசை மற்றும் நாற்காலிகள் வழங்கினர்.  ppகாஞ்சிபுரம் மாநகராட்சி 30-வது வார்டு பகுதியில் இயங்கி வரும் யாகசாலை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு போதிய மேசை, நாற்காலிகள் இல்லாத காரணத்தால் மாணவர்கள் சற்று அவதி அடைந்தனர். இதனால், மேசை மற்றும் நாற்காலிகள் வழங்கிட காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசனிடம் பெற்றோர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.ppஅவர்களது கோரிக்கையை ஏற்று தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2025-26ன் கீழ் ரூ.3.12 லட்சத்தை ஓதுக்கீடு செய்து 25 மேசை மற்றும் நாற்காலிகளை வாங்கிக் கொடுத்தார். இதனை பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியானது பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது.ppநிகழ்வில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் பங்கேற்று, மேசை மற்றும் நாற்காலிகளை ஒப்படைத்தார். மேலும் இன்று குழந்தைகளை தினத்தை ஒட்டி பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி தனது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துக் கொண்டார். ppபின்னர், மாணவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார். இந் நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நளினி, மண்டலக் குழுத் தலைவர் சந்துரு, மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ், கமலகண்னன், பள்ளி தலைமை ஆசிரியர்,ஆசிரியர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.


User: ETVBHARAT

Views: 129

Uploaded: 2025-11-14

Duration: 03:36