உண்ணாவிரதம் இருந்த மக்கள் வலுகட்டாயமாக கைது!

உண்ணாவிரதம் இருந்த மக்கள் வலுகட்டாயமாக கைது!

pதிருப்பத்தூர்: ஆம்பூர் அருகே அடிப்படை வசதி செய்து தரக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்களை போலீசார் வலுகட்டயாமாக கைது செய்தனர்.ppதிருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேவலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பாங்கிஷாப், பேஷ்இமாம் நகர், கோல்டன் சிட்டி, ஸ்டார் சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.ppஇப்பகுதியில் சாலைகள், கழிவுநீர், கால்வாய் வசதி, குடிநீர்,போன்ற எவ்வித முறையான அடிப்படை வசதிகளும் ஏதும் இல்லையெனவும், தங்களது பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி அப்பகுதி மக்கள் அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனார்.  ppமேலும், அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து மட்டுமே செல்வதாகவும், அடிப்படை வசதிகளை செய்து தர எவ்வித ஏற்பாடுகளையும் இதுவரை செய்யவில்லை எனவும் கூறி அதிகாரிகளை கண்டித்து இன்று, பாங்கிஷாப் பகுதியில் உள்ள வெங்கடசமுத்திரம் கூட்டுச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்ட நிலையில், 20-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் வலுகட்டாயமாக கைது செய்தனர். அவர்களை தனியார் திருமண மண்டபத்திற்கு, அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


User: ETVBHARAT

Views: 4

Uploaded: 2025-11-17

Duration: 03:35