தஞ்சை பெரிய கோயிலில் இருந்து சைக்கிள் பயணம் தொடங்கிய நெதர்லாந்து நாட்டினர்!

தஞ்சை பெரிய கோயிலில் இருந்து சைக்கிள் பயணம் தொடங்கிய நெதர்லாந்து நாட்டினர்!

pதஞ்சாவூர்: நெதர்லாந்து நாட்டை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தஞ்சை பெரிய கோயிலில் இருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கினர்.ppதஞ்சை பெரிய கோயில் உலகப் பிரசித்தி பெற்ற கோயிலாகவும், தமிழர்களின் கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டினர் பெரும்பாலும் தஞ்சை பெரிய கோயிலுக்கு வருவார்கள்.ppஇந்நிலையில், தென்னிந்தியா முழுவதும் சைக்கிளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நெதர்லாந்து நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் நேற்று (நவ 25) தஞ்சை வந்தனர். 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பெரிய கோயிலை சுற்றி பார்த்தனர். தொடர்ந்து கோயிலில் இருந்து தங்களது சைக்கிள் சுற்றுப்பயணத்தை தொடங்கினர்.ppமுன்னதாக அவர்கள் பெரிய கோயிலுக்கு சென்று கோயிலில் உள்ள கல்வெட்டுகள், சிற்பங்களை பார்வையிட்டனர். தொடர்ந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இவர்கள் சைக்கிளில் ஒரு மாத காலம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய தென்னிந்திய மாநிலங்கள் முழுவதும் சென்று வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பார்வையிட உள்ளனர்.


User: ETVBHARAT

Views: 1

Uploaded: 2025-11-26

Duration: 01:37