திருக்கார்த்திகை தீபத் திருவிழா: வண்ண விளக்குகளால் மிளிரும் சபரிமலை கோயில்

திருக்கார்த்திகை தீபத் திருவிழா: வண்ண விளக்குகளால் மிளிரும் சபரிமலை கோயில்

pதேனி: சபரிமலையில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதுppபிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. தினமும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ppநடப்பண்டிற்கான மண்டல பூஜை வருகிற 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்று இரவு நடை அடைக்கப்பட்டு மகர விளக்கு யாத்திரைக்காக டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும். அதனைத்தொடர்ந்து, மகர விளக்கு பூஜை ஜனவரி 14ஆம் தேதி நடைபெறுகிறது. பின்னர் சபரிமலை கோயில் 20ஆம் தேதி நடை அடைக்கப்படுகிறது.ppஇந்நிலையில் "கார்த்திகை" நட்சத்திர தினமான புதன்கிழமை இன்று (03.12.25) மாலை சபரிமலையில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக சன்னிதானத்தின் சுற்றுப்புறங்கள் அனைத்தும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோயில் சுற்றுப்புறத்தில் உள்ள மரங்களில் சீரியல் பல்புகள் தோரணங்களாய் தொங்கவிடப்பட்டுள்ளன. ppசபரிமலை கருவறையை சுற்றியுள்ள கட்டிடங்கள் அனைத்தும் அலங்கார மின் விளக்குகளால் மிளிர்கின்றன. இன்று (03.11.25) மாலை, சபரிமலை தந்திரி கண்டராரு மகேஸ் மோகனரு, பக்தர்களின் சரண கோஷம் முழங்க கார்த்திகை தீபம் ஏற்றுகிறார்.


User: ETVBHARAT

Views: 4

Uploaded: 2025-12-03

Duration: 01:09