ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த ஐயப்ப பக்தர்

ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த ஐயப்ப பக்தர்

pசேலம்: ஓடும் ரயிலில் ஏற முயன்று தடுமாறி கீழே விழுந்த ஐயப்ப பக்தரை, ரயில்வே போலீசார் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. ppசென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயமணி (71). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சபரிமலைக்கு சென்று கொண்டிருந்தார். இதில், ரயில் சேலம் ரயில்வே நிலையத்தில் நின்றபோது, ஜெயமணி தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக ரயிலில் இருந்து இறங்கினார். பின்னர் பாட்டில் வாங்கி வருவதற்குள் ரயில் புறப்பட்டதால் ஓடிவந்து ரயிலில் ஏற முயன்றார். இவருக்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை எஸ்ஐ பழனி உதவி செய்தார்.ppஆனால், ஜெயமணி நிலை தடுமாறிய கீழே விழுந்த நிலையில், எஸ்ஐ பழனி துரிதமாக செயல்பட்டு அவரது கையை பிடித்து இழுத்து உயிரை காப்பாற்றினார். இதில், அவருக்கு காயம் ஏற்பட்டதால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அடுத்த ரயிலில் சபரிமலைக்கு அனுப்பி வைத்தனர். உயிரை காப்பாற்றிய போலீசாருக்கு ஜெயமணி நன்றி தெரிவித்தார். இந்நிலையில், இதுகுறித்த வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.


User: ETVBHARAT

Views: 4

Uploaded: 2025-12-04

Duration: 01:07