#anmmedia #ONE AMONG AND AMONGST THE PEOPLE புத்தகம் வெளியீட்டு விழா - ஆளுநர் தமிழிசை பேச்சு |

By : anmmedia24

Published On: 2022-04-19

7 Views

27:56

#anmmedia24 #onlyforbjpnews #தெலுங்கானா ஆளுநராக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளும் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் ONE AMONG AND AMONGST THE PEOPLE என்கிற புத்தகம் வெளியீட்டு விழா நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் நக்கீரன் ஆசிரியர் கோபால், துக்ளக் ஆசிரியர் ரமேஷ், ராஜ் தொலைக்காட்சி ஆசிரியர் மகேந்திரன், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஆசிரியர் கார்த்திகை செல்வன், ராம்குமார் (நடிகரும் சிவாஜி மகன்) மற்றும் ஊடகத் துரையை சார்ந்த முக்கிய ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர். முதலில் புத்தகத்தை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவரின் கணவர் சௌந்தரராஜன் வெளியிட்டனர். அதை நக்கீரன் கோபால் பெற்றூக் கொண்டார். இரண்டாவது புத்தகத்தை நடிகர் ராம்குமார் பெற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து பத்திரிக்கை துறையின் ஆசிரியர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
அனைவரும் மேடையில் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களை வாழ்த்தி பேசினர். அதன்பின் மேடையில் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் :-

அனைத்து ஊடகத்துறை நண்பர்கள் மற்றும் கேமராக்கள் நிறைந்து இருக்கிறதை பார்க்கும்பொழுது நான் ஒரு பாக்கியசாலி எனக் கருதுகிறேன். நான் அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை அன்பை தான் பயன்படுத்துகிறேன்

தமிழகத்தில் தமிழ் பெண்ணாக வலம் வந்து இன்று இரண்டு மாநிலங்களில் ஆளுனராக இருக்கும் நிலையில், இந்த பதவியோ அடிப்படையில் எளிமையாக அனைவரும் அணுக வேண்டிய இடத்தில் இருக்க வேண்டும் என நான் உறுதி கொண்டேன். நாம் நம் வேலையை செய்ய வேண்டும் அதுமட்டுமில்லாமல் அனைவரையும் அரவணைத்து செயல்பட வேண்டும் என்றார்.





#anmmedia24 #annamalaimedia24 Daily news channel, 24 hours live news is updated, Current affairs of Tamil Nadu, India News, National News, and International News, Politics News along with that Sports News, Business News, Cinema News, Latest Political Issues, Breaking news, Entertainment News, Current news of Tamilnadu political, Political news updates, Trending news etc.

Trending Videos - 14 May, 2024

RELATED VIDEOS

Recent Search - May 14, 2024