#anmmedia #கவர்னர் சென்ற போது திமுக வினர் நடந்து கொண்டது மிகவும் கண்டிக்கதக்கது - அண்ணாமலை |

By : anmmedia24

Published On: 2022-04-23

1 Views

02:47

#anmmedia24 #onlyforbjpnews #சேலம் மாவட்டம்., மேட்டூர் அருகே ஜலகண்டபுரத்தில் பாஜக மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் சுதிர்முருகன் தலைமையில் பொதுகூட்டம் நடைபெற்றது. இந்த பொது கூட்டத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது....
பெட்ரோலுக்கு மாற்றாக இ-பைக்களை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும்; இதற்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. டாஸ்மாக்கை வைத்துதான் தமிழக அரசு நிர்வாகம் செய்கிறது. டாஸ்மாக்கை மூடினால் அரசு அலுவலர்கள் யாருக்கும் அரசால் சம்பளம் வழங்கமுடியாது.
டாஸ்மாக்கை மூட வேண்டும் என ஏற்கனவே ஒருநாள் உண்ணாவிரதம் இருந்த ஸ்டாலினால் தற்போது முதலமைச்சராக இருந்தும் கூட தமிழகத்தில் டாஸ்மாக்கை மூட முடியாது. தி.மு.க.வின் ஆட்சியில் தமிழகம் பின்னோக்கி செல்கிறது. சமூகநீதி என்கிற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாமல் தி.மு.க இந்த வார்த்தையை பயன்படுத்தி வருகிறது. ஆனால் உன்மையான சமூகநீதிக்கு பாஜகதான் எடுத்துக்காட்டு., திமுகவில் வாரிசு அரசியல் மட்டுமே நடக்கும்போது சமூகநீதியை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
மோடிக்கு பிறகு அவரது வாரிசு யாரும் பிரதமர் பதவிக்கு வரப்போவதில்லை என்று கூறினார் மேலும் முதல்வரின் துபாய் பயணம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டதாக கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்துள்ள பாஜக பிரமுகர் அருள்பிரகாஷ் க்கு மேடையில் சால்வை அணிவித்து அண்ணாமலை வாழ்த்து.
ஜெயிலுக்கு போயிட்டு வந்தால்தான் தமிழகத்தில் பிரபலமாக முடியும், மீஷாவை பார்த்து பயப்படாத ஸ்டாலின் சமூக வலைத்தளத்திற்கு பயப்படுகிறார் என்பதை தற்போது அனைவராலும் பார்க்க முடிகிறது தெரிவித்தார். மேலும் இந்த பொது கூட்டத்தில் சிறப்பு விருத்தினர்கள். பாஜக மாநில துணை தலைவர் VP துறை சாமி மற்றும் KP ராமலிங்கம் முன்னாள் நாடாளுமன்ற மன்ற உறுப்பினர் கலந்து கொண்டனர்.


#anmmedia24 #annamalaimedia24 Daily news channel, 24 hours live news is updated, Current affairs of Tamil Nadu, India News, National News, and International News, Politics News along with that Sports News, Business News, Cinema News, Latest Political Issues, Breaking news, Entertainment News, Current news of Tamilnadu political, Political news updates, Trending news etc.

Trending Videos - 13 May, 2024

RELATED VIDEOS

Recent Search - May 13, 2024